Wednesday, July 8, 2020

CLAT என்ற தேர்வு ஆண்டு தோரும் நடத்தப்படுகின்றது

இந்தியாவில் உள்ள மத்திய சட்ட பல்கலை கழகங்கள்(NLUs), மற்றும் தனியார் சட்ட கல்லூரிகளில் சட்ட படிப்பு படிக்க CLAT என்ற தேர்வு ஆண்டு தோரும் நடத்தப்படுகின்றது.

மத்திய சட்ட பல்கலை கழங்கள் (NLU) சட்ட படிப்பின் உயர் கல்வி நிறுவனங்களாக விளங்குகின்றது. உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் பணியாற்றும் புகழ் பெற்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளில் பலர் மத்திய சட்ட பல்கலை கழங்களில் படித்தவர்கள், தமிழகத்தில் திருச்சியில் மத்திய சட்ட பல்கலை கழகம் உள்ளது.

+2 படித்த, (அல்லது படித்து கொண்டிருக்கும்) மாணவர்கள் இந்த CLAT தேர்வை எழுதலாம், இதில் நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சட்ட பல்கலை கழகத்தில் சட்டம் படிக்கலாம். இந்த தேர்விற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம், விண்ணபிக்க கடைசி தேதி 31-03-2020

தகுதி : 
• +2 -ல் எந்த பிரிவு எடுத்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
• குறைந்தது 45 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்
• வயது வரம்பு கிடையாது

பயிற்றுவிக்கப்படும் படிப்புகள் :
• ஒருங்கினைந்த 5 ஆண்டு B.A LLB (Hons) படிப்பு
• ஒருங்கினைந்த 5 ஆண்டு B.Com LLB (Hons) படிப்பு

விண்ணப்பிக்கும் முறை :
https://consortiumofnlus.ac.in/clat-2020/ இணையதளத்தில் உங்களின் விபரங்களை பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்ப கட்டணம் ரூ.4,000
தேர்வு 10.05.2020 அன்று நடைபெறும், தேர்வு முடிவுகள் 24.05.2020 அன்று வெளியிடப்படும்இந்த CLAT தேர்வின் விபரத்தை பார்ப்போம். 

CLAT தேர்வை பற்றி :

இது 2 மணி நேரம் நடக்கும் தேர்வு, "சரியான பதிலை தேர்ந்து எடுத்து எழுதுக"  (Multiple-Choice Questions) வைகையில் 150 கேள்விகள் கேட்கப்படும், ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண். மொத்தம் 150 மதிப்பெண். தவறான கேள்விகளுக்கு 0.25 மதிப்பெண் குறைத்து கொள்ளப்படும் (Negative marking)

கீழ்காணும் பாட பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்
• English Language
• Current Affairs, including General Knowledge
• Legal Reasoning
• Logical Reasoning
• Quantitative Techniques
இந்த தேர்விற்க்கான முழு பாடதிட்டமும் (syllabus) இந்த https://consortiumofnlus.ac.in/clat-2020/ug-syllabus.html லின்கில் உள்ளது

இந்த தேர்வில் குறைந்தது 40 % மதிப்பெண் எடுப்பவர்கள் LL.M. Admission Test என்ற இராண்டாம் கட்ட தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதில் 100 கேள்விகள் கேட்கப்படும்
https://consortiumofnlus.ac.in/clat-2020/notifications/clat_2020_press_release.pdf

இந்த தேர்வு பற்றிய விபரங்கள் https://consortiumofnlus.ac.in/clat-2020/ug-instructions.html லின்கில் உள்ளது.

கூடுதல் விபரம் தேவைபடும் மாணவர்கள் Wisdom கல்வி வழிகாட்டி பக்கத்தில் உள்ள இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

https://www.facebook.com/wisdomkalvi/posts/1003546273351956

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

#WisdomKalvi
#CLAT2020

No comments:

Post a Comment